Site icon Tamil News

பயனர்களை கண்காணிக்கும் Instagram!

ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் சராசரியாக ஒவ்வொரு நாளும் மூன்று மணி நேரத்தை இணையத்தில் செலவழிப்பதாக தரவுகள் சொல்கிறது.

அதிலும் குறிப்பாக சமூக வலைதளங்களை பயன்படுத்துவோரே இங்கு ஏராளம். குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் போடுவது, ரிலீஸ் பார்ப்பது என மக்களிடம் இன்ஸ்ட்டாவின் பயன்பாடு அதிகம் உள்ளது. இந்நிலையில் இன்ஸ்டா மற்றும் பேஸ்புக் தங்கள் பயனர்களின் செயல்பாட்டை தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் மக்கள் வணிக ரீதியாக அதிகம் ஏமாற்றப்படுவதால், அதைத் தடுப்பதற்கு புதிய அம்சத்தையும் இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இது பயனர்கள் தங்களின் விளம்பரத்தைக் கட்டுப்படுத்தி மேலும் தனியுரிமையுடன் இருக்க வழிவகைக்கிறது. இதற்காக ‘ஆக்டிவேட் ஆஃப் மெட்டா’ என்ற அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது இன்ஸ்டாகிராம். இதை ஒருவர் ஆக்டிவேட் செய்துவிட்டால் ஒருவரின் இன்ஸ்டாகிராம் செயல்பாடுகள், பயன்படுத்தப்பட்ட நேரம் போன்ற அனைத்து தரவுகளையும் காட்டுகிறது.

மேலும் மெட்டா நிறுவனத்தால் கண்காணிக்கப்படும் உங்களுடைய ஹிஸ்டரி, மற்றும் செயல்பாடுகள் அனைத்தையும் நீங்களே அழித்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் மேலும் கூடுதலாக உங்களை கண்காணிக்காத வண்ணம் இந்த அம்சம் அனைத்தையும் தடுக்கிறது. இதனால் இன்ஸ்டாகிராமுக்கு பாதிப்புதான் என்றாலும், பயனர்களின் தனியுரிமைக்கு நன்மை புரியும் விதமாக மெட்டா நிறுவனம் இந்த அம்சத்தைக் கொண்டு வந்துள்ளது.

எனவே நீங்கள் அதிகமாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்தும் நபராக இருந்தால் இந்த புதிய அம்சத்தை உடனே ஆக்டிவேட் செய்து கொள்ளுங்கள். இந்த அம்சத்தை உங்களுடைய இன்ஸ்டாகிராம் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்று எளிதாக மாற்ற முடியும். இதன் மூலமாக இன்ஸ்டாகிராம் வழியாக மற்ற நிறுவனங்கள் உங்கள் தரவுகளை சேமிப்பதில் இருந்து நீங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

 

Exit mobile version