Site icon Tamil News

ஜெர்மனி வீடு வாங்க காத்திருப்பவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி வங்கிகளில் வட்டி வீதம் குறைவடைந்து இருப்பதனால் புதிய வீடுகள் வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மனியில் புதிய வீடுகளை கொள்வனவு செய்வதற்குரிய வங்கியுடைய வட்டி வீதத்தில் வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதன் காரணத்தினால் புதிய வீடுகளை கொள்வனவு செய்கின்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சில நகரங்களில் கடந்த வருடத்தை விட இவ்வருட முதல் 3 மாதங்களில் வீடுகளின் எண்ணிக்கை 49 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்நிலையில் விலையேற்றத்தை பொருத்த வகையில் கடந்த ஆண்டு உடன் ஒப்பிடும் பொழுது 0.6 சதவீதம் விலையற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வீட்டினுடைய விலையானது 2490 யுரோவாக உயர்ச்சி அடைந்துள்ளதாக ஒரு புள்ளி விபரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் வாடகை குடியிருப்பாளர்களுடைய விடயத்தில் வாடகையுடைய விலையானது கடந்த வருடத்தை விட 1.7 சதவீத உயர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version