Site icon Tamil News

பணவீக்கம் கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச்சத்து அளவை பாதிக்கின்றது

கடந்த ஜூன் மாத ஊட்டச்சத்து மாதத் தரவுகளின்படி, இந்த நாட்டில் 5 வயதுக்குட்பட்ட 15,763 கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

2022 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் இது 0.2 வீதம் குறைவு என சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், குடும்ப சுகாதாரப் பணியகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்களின் போசாக்கு மட்டத்தில் குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களின் ஊட்டச் சத்து குறைவதற்கு நிலவும் உணவுப் பணவீக்கமே பிரதான காரணம் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போஷாக்கு உணவுப் பைகளில் அதிக ஊட்டச்சத்துடன் கூடிய அத்தியாவசிய உணவுப் பொருட்களை உள்ளடக்கும் வேலைத்திட்டம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக அங்கு விளக்கமளிக்கப்பட்டது.

Exit mobile version