Site icon Tamil News

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய வீரர்

இந்திய கிரிக்கெட் வீரர் மயான்க் அகர்வால் தற்போது ரஞ்சி தொடரில் விளையாடி வருகிறார்.

கர்நாடக அணி கேப்டனான மயான்க் அகர்வால் தனது அணியினருடன் டெல்லி புறப்பட விமான நிலையம் சென்றார்.

அணியினருடன் விமானத்தில் ஏறிய மயான்க் அகர்வாலுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

விமானத்தில் இருந்த படி சில முறை அவர் வாந்தி எடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து விமானத்தில் இருந்து அவசரஅவசரமாக வெளியேறிய மயான்க் அகர்வால் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும், எதனால் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பதை கண்டறிவதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Exit mobile version