Site icon Tamil News

1,320 முறை பாலியல் வன்கொடுமை – பிரித்தானியாவில் வசமாக சிக்கிய இந்து மதகுரு

பிரித்தானியாவில் உள்ள இந்திய ஆன்மீக தலைவராக காட்டிக்கொண்ட ஒருவர், பெண்களை அவர்கள் சிறுமிகளாக இருந்தபோதிருந்து வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்து எட்டு மில்லியன் யூரோ நஷ்ட ஈடு கேட்டு அவரது முன்னாள் பக்தர்களால் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

பாபா பாலக் நாத்தின் வழித் தோன்றலாக தன்னை நிறுவிக் கொள்ளும் ராஜிந்தர் காளியா தனது சொந்த விருப்பங்களுக்காக பக்தைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக நான்கு பெண்கள் வழக்கில் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருசக்கர வாகன விபத்தில் கால்களில் அடிப்பட்டவர் ஹிமாச்சல் பிரதேசத்துக்கு சென்று வந்த பின்னர் அதிசயம் நிகழ்ந்ததாகவும் பின்னர் பிரித்தானியா திரும்பியவர் தனது பிரசங்கத்தை தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

1986ஆம் ஆண்டு பிரித்தானியாவில் சொந்தமாக கோயில் தொடங்கியவர் தன்னை கடவுளின் அவதாரம் என அறிவித்துக் கொண்டார்.

வழக்குத் தொடர்ந்த எழு பேரின் பிரதிநிதியான மார்க் ஜோன்ஸ், காளியா அவரது ஆளுமையால் பல ஆண்டுகளாக வழக்கு தொடர்ந்தவர்களை ஏமாற்றிவந்ததுள்ளார். கடவுள் தனது மூலமாக அதிசயங்களை செய்வதாக நம்ப வைத்துள்ளார்.

இதன் மூலம் பொருளாதார மற்றும் பாலியல் ரீதியாக அவர்களை பயன்படுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் ஆஜரான ஒரு பெண், தான் 22 ஆண்டுகளாக 1,320 முறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பின்னர் ஒரு குழந்தையின் தாயாக தேவாலயத்தில் இணைந்ததாகவும் தெரிவித்தார்.

மேலும், அவருடனான வெறுக்கத்தக்க பாலியல் செயல்கள் இந்து கடவுள் கிருஷ்ணருக்கு ஒப்பானது எனக் கூறியதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதே போல இன்னொரு பெண் தான் 13 வயது முதல் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாகவும் 21 வயதில் தன்னால் பதிவு செய்யப்பட்ட அறையில் அவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக வெஸ்ட் மிட்லேண்ட் பொலிஸார் அவர் மீது வழக்குத் தொடர்ந்தபோது போதிய ஆதாரமின்றி வழக்கு கைவிடப்பட்டது. இந்த நிலையில் பிரித்தானிய நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 68 வயதான ராஜிந்தர் காளியா இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version