Tamil News

Indian 2: மலேசியா பறந்த கமல் & டீம்… கூட யாரெல்லாம் போயிருக்காங்கனு பாருங்க

நடிகர் கமல்ஹாசன் வில்லனாக மிரட்டியுள்ள கல்கி 2898 ஏடி படம் நேற்றைய தினம் சர்வதேச அளவில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக கமல்ஹாசனின் இந்தியன் 2 படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீசாகவுள்ளது.

கடந்த சில வாரங்களாக கல்கி 2898 ஏடி படத்தின் பிரமோஷன்களில் பிசியாக காணப்பட்ட கமல்ஹாசன் அடுத்ததாக இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன்களில் சிறப்பாக பங்கேற்று வருகிறார்.

சர்வதேச அளவில் இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழுவினர் திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது படக்குழுவினர் மலேசியா சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஜூலை முதல் வாரத்தில் ஐதராபாத்தில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியும் திட்டமிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் படத்தின் அடுத்தடுத்த லிரிக் வீடியோ பாடல்கள் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளன.

கடந்த சில வாரங்களாக கல்கி படத்தின் ப்ரோமோஷன்களில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டார் கமல்ஹாசன். இந்நிலையில் தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் ப்ரோமோஷன்களில் அவர் பங்கேற்று வருகிறார். அவருடன் இயக்குனர் ஷங்கர், நடிகர் சித்தார்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டவர்களும் இணைந்து அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகின்றனர்.

Exit mobile version