Site icon Tamil News

இந்தியா :இறந்த பெண் மருத்துவர் உடலின் பல இடங்களில் காயம்.. வெளியான மருத்துவ அறிக்கை!

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்வலைகள், போராட்டங்களை ஏற்படுத்தயுள்ளது.

இந்நிலையில், அந்தப் பெண் மருத்துவரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அவர் உடல் ரீதியாக கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார் என்றும் அவருடைய அந்தரங்கப் பகுதிகள், மற்ற பல இடங்களில் பலத்த காயங்கள் தென்பட்டன என்று கூறப்பட்டுள்ளது.அத்துடன், அவருடைய பெண் உறுப்புப் பகுதியில் வெள்ளை நிற திரவம் இருந்ததாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

இந்நிலையில், இந்தியாவின் உச்ச நீதிமன்றம், தானாகவே முன்வந்து இந்த வழக்கு விசாரணையை மேற்கொள்ள உள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் மூவர் கொண்ட அமர்வு செவ்வாய்க்கிழமை இந்த விசாரணையை மேற்கொள்ள உள்ளது.

இறந்த மருத்துவரின் உடலில் 14 காயங்கள் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அவரது இறப்புக்குக் காரணம் கழுத்தை நெரித்து, மூச்சு விட முடியாமல் அவரை அழுத்தியது என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அந்த மேல்நிலை பட்டக்கல்வி பயிற்சி மருத்துவர் ஆர் ஜி கார் மருத்துவமனைக் கல்லூரியின் கலந்துரையாடல் அறையில் ஆகஸ்ட் 9ஆம் திகதி உயிரிழந்து கிடக்கக் கண்டார். இதன் தொடர்பில் சஞ்சோய் ராய் என்ற கோல்கத்தா காவல்துறையின் துணை ஊழியர் ஒருவர் மறுநாள் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து கோல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த சம்பவத்தின் விசாரணையை இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றியது.

இந்தக் கொடூரமான குற்றச்செயலை கண்டித்து மேற்கு வங்கம், இந்தியாவின் மற்ற பகுதிகளில் மருத்துவர்கள், தாதியர்கள் எனப் பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதுடன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 19ஆம் திகதி) அன்று தாங்கள் போராட்டங்களை நிறுத்தப்போவதில்லை என சூளுரைத்தனர். அவர்கள் பாதுகாப்பான வேலையிடம், குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டங்களை தொடர்கின்றனர்.

மற்றொரு நிலவரத்தில் சம்பவம் நடந்து மூன்று நாட்களாகியும் விசாரணைக்கு காவல்துறை நாய்களைப் பயன்படுத்தாதது பற்றி விமர்சித்திருந்த திரிணாமூல் நாடாளுமன்ற உறுப்பினர் சுக்கேந்து சேகர் ரரய் என்பவரை காவல்துறையினர் விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுத்திருந்தனர். இதை எதிர்த்து தம்மை காவல்துறையினர் கைது செய்யாதிருக்குமாறு இருக்கக் கோரி கோல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனுச் செய்துள்ளாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.

Exit mobile version