Site icon Tamil News

மத்தள விமான நிலையத்தினை கைப்பற்றும் தீவிர முயற்சியில் இந்தியா – ரஷ்யா

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை ரஷ்ய மற்றும் இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9, 2023 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மத்தல சர்வதேச விமான நிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்கு ஆர்வமுள்ள தரப்பினரிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி, விருப்ப மனுக்கள் வரவழைக்கப்பட்டு, 5 அமைப்புகள் தங்கள் விருப்பங்களை சமர்ப்பித்துள்ளன.

பின்னர், அமைச்சர்கள் சபையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை ஒருமித்தக் குழுவின் பரிந்துரைகளின்படி, விருப்பங்களை சமர்ப்பித்த 05 நிறுவனங்களில் 02 பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அதன்படி, மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் இந்தியாவின் Shaurya Aeronautics (pvt)Ltd மற்றும் ரஷ்யாவின் ஏர்போர்ட்ஸ் Airports of regions management company அல்லது அதனுடன் இணைந்த நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளது.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சரால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுக்கு, விமான நிலையத்தை முப்பது ஆண்டுகளுக்கு மாற்றுவதற்கு அமைச்சர்கள் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

Exit mobile version