Tamil News

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு போர் விமானங்கள் வாங்க ஒப்புதல்

பிரான்ஸிடம் இருந்து இந்திய கடற்படைக்கு 26 ரஃபேல் போர் விமானங்கள் மற்றும் மூன்று ஸ்கார்பீன் ரக வழக்கமான நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜன்த் சிங், பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சவுகான் மற்றும் முப்படைத் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்ட பாதுகாப்பு கையகப்படுத்துதல் கவுன்சில் (டிஏசி) கூட்டத்தில் இந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஒப்பந்தங்கள் தொடர்பில் பிரதமர் மோடியின் பிரான்ஸ் பயணத்தின் போது அறிவிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக இன்று வியாழக்கிழமை காலை பிரான்ஸ் சென்றுள்ளார்.

முன்மொழிவுகளின்படி, இந்திய கடற்படைக்கு 22 ஒற்றை இருக்கை ரஃபேல் மரைன் விமானங்களும் நான்கு பயிற்சி விமானங்களும் கிடைக்கும்.

நாடு முழுவதும் உள்ள பாதுகாப்பு சவால்களை கருத்தில் கொண்டு படை பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால், இந்த போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களை அவசரமாக வாங்குவதற்கு கடற்படை அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்த ஒப்பந்தங்கள் ரூ.90,000 கோடிக்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது, ஆனால் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பிறகு நடைபெறும் ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே இறுதிச் செலவு தெளிவாகத் தெரியும்.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியா விலைச் சலுகைகளை கோர வாய்ப்புள்ளது, .

Exit mobile version