Site icon Tamil News

இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பின் அளவு அதிகரிப்பு!

இலங்கையின் வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் ஏப்ரல் மாதத்தில் 2.2 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி கடந்த மார்ச் மாதம் 2694 மில்லியன் டொலர்களாகப் பதிவாகியிருந்த வெளிநாட்டுக்கையிருப்பின் அளவு கடந்த ஏப்ரல் மாதத்தில் 2இ755 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

அண்மைய சில மாதங்களாக 360 ஆகக் காணப்பட்ட அமெரிக்க டொலர் ஒன்றுக்கு எதிரான ரூபாவின் பெறுமதிஇ தற்போது சுமார் 320 ரூபா என்ற மட்டத்தில் பேணப்பட்டுவருகின்றது.

மறுபுறம் சர்வதேச நாணய நிதியத்துடன் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இலங்கை எதிர்வரும் ஜுன் மாதத்துக்குள் தேறிய வெளிநாட்டுக்கையிருப்பின் அளவை 710 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

Exit mobile version