Site icon Tamil News

மஹிந்தவுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கப்பட்டுள்ளது.

10 நாட்களுக்கு இந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தற்காலிகமாக நீக்கியுள்ளது.

இன்று இந்த உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், எதிர்வரும் ஏப்ரல் 20 முதல் 30 ஆம் திகதி வரையில், மஹிந்த ராஜபக்ஷவுக்கான வெளிநாட்டு பயணத் தடையை நீக்கியுள்ளது.

2022ஆம் ஆண்டு காலி முகத்திடல் மைதானத்தில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டபோதே கோட்டை நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக தனது சேவைபெறுநரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தென்கொரியாவுக்கு செல்ல வேண்டியிருப்பதால், வெளிநாட்டு பயணத்தடையை நீக்குமாறு  அவரின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை கருத்தில் கொண்ட கோட்டை நீதவான் மஹிந்த ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கியுள்ளது.

Exit mobile version