Site icon Tamil News

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி நிலையம் திறந்துவைப்பு!

மன்னாரில் நிர்மாணிக்கப்பட்ட 15 மெகாவாட் காற்றாலை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று (06) காலை மின் உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த ஆலையை செப்டெம்பர் மாதம் திறக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும், உள்ளூர் பொறியியலாளர்கள் அதன் பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்  தாரக பாலசூரிய, மீண்டும் ஒருமுறை மின்கட்டணத்தை அதிகரிப்பது தனக்கும் பிரச்சினையாகவே உள்ளது.

“நீண்ட கால தீர்வுகளுக்கு செல்ல வேண்டும். மின்சாரத்தை அதிகரிப்பதை விட உற்பத்தி செலவை குறைப்பது எப்படி என்று பார்க்க வேண்டும். முடிந்தவரை சோலார், காற்று போன்றவற்றுக்கு சென்று உற்பத்தி செலவை குறைக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version