Site icon Tamil News

இலங்கையில் வாக்குச் சீட்டை படம் பிடித்து வெளியிட தடை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்காளர் ஒருவர் தமது வாக்கை செலுத்தியதன் பின்னர் அதனை கையடக்க தொலைபேசியில் படம் எடுத்தல், காணொளிகளை பதிவுச்செய்தல் மற்றும் அவற்றை சமூக ஊடகங்களில் பதிவிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான செயல்கள் சட்ட விரோதம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வாக்கைச் செலுத்தியதன் பின்னர், தாம் வாக்களித்த வேட்பாளரின் பெயரை வாக்களிப்பு நிலையத்திற்கு வெளியில் வந்து கூறுவது தேர்தல் சட்டத்திற்கு முரணானதாகும்.

எனவே, குறித்த விடயங்கள் வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் தவிர்க்கப்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வாக்களிப்பு நிலையத்தில் புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் அல்லது போதைப்பொருள் பாவனையுடன் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வது சட்டவிரோதமானது எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

Exit mobile version