Site icon Tamil News

சிறைக்குள் விஷம் வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம் – வழக்கறிஞர் அச்சம்

பாகிஸ்தான் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் விஷம் வைத்து கொல்லப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக நீதிமன்றத்தில் அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரும், முன்னாள் பாகிஸ்தான் அதிபருமான இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக இருந்தபோது, தனக்கு வந்த பரிசுப் பொருட்களை அரசு கஜானாவில் சேர்க்காமல் பல கோடி ரூபாய் ஊழல் செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த வழக்கில் அவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறையில் விஷம் வைத்து இம்ரான் கான் கொல்லப்படலாம் என அவரது தரப்பு வழக்கறிஞர் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இம்ரான் கான் வழக்கறிஞர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மனரீதியாக இம்ரான்கான் சிறையில் துன்புறுத்தப் படுகிறார். அவர் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சிறையில் விஷம் வைத்து இம்ரான்கான் கொல்லப்படலாம். எனவே, அவருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

இம்ரான் கான் விஷம் வைத்துக் கொல்லப்படலாம் என்ற அவரது வழக்கறிஞரின் கருத்தால் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இம்மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Exit mobile version