Site icon Tamil News

விமானத்தில் செல்லும் பயணிகளின் உடல் எடையை அளவிட தயாராகும் Korean Air!

அடுத்த சில வாரங்களுக்கு Korean Air விமானத்தில் செல்லும் சில பயணிகளின் உடல் எடை பார்க்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளின் எடை என்னவாக இருந்தாலும் பிரச்சினை இல்லை. எனினும் அவ்வப்போது விமான எடை குறித்த தகவல்களை வழங்கவேண்டிய விமான நிறுவனங்களில் Korean Air ஒன்றாகும்.
அதனால் பயணிகளின் எடை பார்க்கப்படும் என்றது CNN செய்தி நிறுவனம்.

ஒகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 3ஆம் திகதி வரை தென்கொரியாவின் கிம்போ அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படுவோர், செப்டம்பர் 8 ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தென்கொரியாவின் இன்சியோன் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்படுவோர் ஆகியோர் பயணிகளின் எடையும் பெட்டிகளின் எடையும் பெயர் அடையாளமின்றி நிறுக்கப்படும்.

அந்தத் தகவல்கள் தென்கொரியாவின் நில, கட்டமைப்பு, போக்குவரத்து அமைச்சுடன் பகிரப்படும்.

திட்டத்தில் கலந்துகொள்ள விரும்பாத பயணிகள் Korean Air ஊழியரிடம் தெரிவிக்கலாம் என கூறப்படுகின்றது.

இந்த ஆண்டுத் தொடக்கத்தில் Air New Zealand விமான நிறுவனமும் அத்தகைய திட்டத்தைச் செயல்படுத்தியது.

விமானத்தின் எரிபொருள் தேவைகள், எடை விநியோகிக்கப்படும் முறை ஆகியவை குறித்து விமான நிறுவனங்கள் முடிவெடுக்க அந்தத் தகவல்கள் உதவும் என்று கூறப்பட்டது.

Exit mobile version