Site icon Tamil News

பங்களாதேஷில் உள்ள இலங்கையர்கள் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்!

பங்களாதேஷில் உள்ள இலங்கை மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

அங்குள்ள 3 பல்கலைக்கழகங்களில் 50 இலங்கை மாணவர்கள் கல்வி கற்பதாக வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷில் இடம்பெற்று வரும் போராட்டங்கள் காரணமாக பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளதாலும் வெளிநாட்டு மாணவர்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்படாத காரணத்தினால் இலங்கை மாணவர்கள் பாதுகாப்பாக விடுதிகளில் தங்கி இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் அவர்கள் தொடர்ந்தும் தொடர்பில் இருக்கின்றனர். குறித்த மாணவர்கள் விரும்பினால் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971-ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்களை அடுத்து அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் அரசாங்க வேலை ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டங்களில் பல நாட்கள் மோதல்களுக்குப் பிறகு ஊரடங்கு உத்தரவு மற்றும் இராணுவப் படைகளை அனுப்புவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

Exit mobile version