Site icon Tamil News

கோதுமை மாவிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு!

கோதுமை மா இறக்குமதி வரி கிலோ ஒன்றுக்கு 16  ரூபாவில் இருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.  அதேபோல் கோதுமை மா தானியங்களுக்கு 06 ரூபாய் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இன்று (30.08) காலை ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மேற்படி அறிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்,  கோதுமை மாவின் விலையில் அதிகரிப்பு ஏற்படாது எனவும், இறக்குமதி கட்டுப்பாட்டை மாத்திரமே எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை கோதுமை மா இறக்குமதி அனுமதி முறை ரத்து செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர்  ரஞ்சித் சியம்பலாபிட்டிய மேலும் தெரிவித்துள்ளார்.  இது நேற்று (29.08) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளது.

Exit mobile version