Site icon Tamil News

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 2 போட்டி நடத்த விரும்பும் ICC?

டி20 உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொண்டு பங்கேற்க உள்ளது. மேலும், அந்த 20 அணிகளும் தலா ஐந்தைந்து அணிகளாக பிரிக்க பட்டு மொத்தம் 4 பிரிவாக (Group) உள்ளனர். அந்தந்த பிரிவுகளில் இருக்கும் அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ள வேண்டும். இறுதியில் முதலில் இடம் பிடிக்கும் 2 அணிகள் அடுத்த சுற்றன சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறுவார்கள்.

இதில் குரூப்-ஏ (Group -A) பிரிவில் இந்தியாவும், பாகிஸ்தானும் இடம் பெற்றுள்ளன. இந்த இரு அணிகளும் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பையை தொடரின் லீக் போட்டியில் வருகிற ஜூன்-9 ம் தேதி அன்று மோதவுள்ளது. இந்த போட்டிக்கு மிகுந்த எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடேயே எப்போதுமே இருக்கும்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான பாசித் அலி அவரது யூடியூப் சேனலில் ஐசிசி திட்டமிட்டு தான் இரண்டு அணியையும் ஒரே பிரிவில் இருக்குமாறு அமைத்துள்ளார் என்று கூறி உள்ளார்.

அவர் பேசுகையில், “உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு 2 போட்டிகளில் மொத வேண்டும் என ஐசிசி விரும்புகிறது என்று நினைக்கிறன். இந்த 2 அணிகளும் லீக் போட்டியை தாண்டி அரையிறுதியிலோ அல்லது இறுதிப்போட்டிலோ சந்திக்கும் வகையில் அவர்கள் அட்டவணையை உருவாக்கியுள்ளனர்.

இது சரியாக அமைகிறதா என்று அந்த நேரத்தில் நாம் தெரிந்து கொள்வோம். மேலும், பாகிஸ்தான் அணி ஃபார்மில் சற்று இந்தியாவிற்கு பின்தங்கி உள்ளது. மேலும், ஐபிஎல் தொடரில் விளையாடி விட்டு இதனால் பாகிஸ்தான் அணியும் பாபர் அசாமும் நன்றாக செயல்பட வேண்டும்”, என்று கூறி இருந்தார்.

Exit mobile version