Site icon Tamil News

பலத்தை காட்ட ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி- நேட்டோ அமைப்பு

நேட்டோ அமைப்பு, தன்னுடைய பலத்தை ரஷ்யா முதலான நாடுகளுக்குக் காட்டும் வகையில், ஜேர்மனி தலைமையில் பிரம்மாண்ட போர்ப்பயிற்சி ஒன்றை மேற்கொள்ள உள்ளது.

நேட்டோவின் 25 உறுப்பு நாடுகளிலிருந்து 10,000 உறுப்பினர்களும், 250 விமானங்களும் இந்த போர்ப்பயிற்சியில் கலந்துகொள்கிறார்கள்.இன்றும் நாளையும் நடக்கும் பயிற்சியில், அமெரிக்கா மட்டுமே 2,000 விமானப்படை வீரர்களையும் 100 விமானங்களையும் பங்கேற்கச் செய்கின்றது.

இந்த போர்ப்பயிற்சியின் நோக்கம், புடின் உட்பட எதிரி நாடுகளுக்கு நேட்டோவின் பலத்தைக் காட்டுவதாகும் என்று கூறியுள்ளார்ஜேர்மனிக்கான அமெரிக்கத் தூதரான Amy Gutmann.

போர்ப்பயிற்சியை ஒழுங்குபடுத்தி நடத்தும் ஜேர்மன் விமானப்படையைச் சேர்ந்த Lt. Gen. Ingo Gerhartz கூறும்போது, நேட்டோ எல்லையின் ஒவ்வொரு சென்றிமீற்றரையும் பாதுகாக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை காட்ட விரும்புகிறோம் என்றார்.அதே நேரத்தில், நாங்கள் ரஷ்யாவுக்குச் சொந்தமான இடங்களுக்கு எங்கள் விமானத்தை அனுப்பமாட்டோம், இது எங்கள் பாதுகாப்புக்காக மட்டுமே என்றார் அவர்.

Exit mobile version