Tamil News

போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் வாங்கிய சம்பளம் எவ்ளோ இவ்வளவா! அதிர்ச்சியில் ரசிகர்கள்

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ’போர் தொழில்’ .

இத் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஆதரவைப் பெற்றதால் அதிக திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இப்படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

சுமார் ரூ 6 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் இதுவரை ரூபாய் 28 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.

இதில் பொலிஸ் அதிகாரிகளாக அசோக் செல்வன், சரத் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் அசோக் செல்வன். தெகிடி, ஓ மை கடவுளே போன்ற வெற்றிப் படங்களில் நடித்துள்ளதுடன் சில நேரங்களில் சில மனிதர்கள், மன்மத லீலை, ஹாஸ்டல், வேழம், நித்தம் ஒரு வானம். எஸ்டேட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் போர் தொழில் படத்திற்காக அசோக் செல்வன் ரூபாய் 50 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version