Site icon Tamil News

உயர் இரத்த அழுத்தம்… அலட்சியம் செய்ய கூடாத அறிகுறிகள்

இன்றைய நவீன வாழ்க்கை முறை காரணமாக, ஆரோக்கியத்திற்கு கிடைத்த பரிசுகளில் ஒன்று தான் உயர் ரத்த அழுத்தம். துரித கதியிலான வாழ்க்கையில், டென்ஷன் என்பது அன்றாட பிரச்சனை என்று ஆகிவிட்ட நிலையில், உயர் ரத்த அழுத்த நோய் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. அதோடு மோசமான உணவு பழக்கமழக்கமும் இதற்கு காரணம்.

உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்புகள்

உயர் ரத்த அழுத்தத்தினால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. நீண்ட காலத்திற்கு ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ரத்தத்தை எடுத்துச் செல்லும் நரம்புகள் சேதம் அடையும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் நரம்புகள் பாதிக்கப்படும் நிலையும் உருவாகிறது. எனவே இரத்த அழுத்தம் இருப்பதற்கான சில அறிகுறிகளை அறிந்து கொள்வதால், இதனை உடனே கண்டறிந்து கட்டுப்படுத்தலாம். மேலே கூறப்பட்டுள்ள, அபாயங்களை கணிசமாக குறைக்கலாம்.

உயர் ரத்த அழுத்தம் இருப்பதற்கான அறிகுறிகள்

உடலில் எந்தவிதமான அசௌகரியங்கள் நோய் அல்லது பிரச்சனை ஏற்பட்டாலும், உடல் சில சமயங்களை நமக்கு வழங்குகிறது. இதனை நாம் நோய்க்கான அறிகுறிகள் என்கிறோம். நோய் அறிகுறிகளை அறிந்து கொண்டு, நோயை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்துவதால், பலவித உடல்நல பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

தலைவலி (Headache)

தினமும் காலை எழுந்திருக்கும் போது தலைவலி ஏற்பட்டால், உடனே டிபிஐ செக் செய்வது நல்லது. இது உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்

தலை சுற்றல் (Giddiness)

காலையில் எழுந்தவுடன், தலை சுற்றல் இருந்தால் அது உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறியாக இருக்கலாம்.

பார்வை மங்குதல்

காலை எழுந்தவுடன் உங்கள் கண் பார்வை மங்கலாக இருப்பது போல் தோன்றினால், உடனே உயர் ரத்த அழுத்தம் என்னும் பிபியை சரி பார்ப்பது நல்லது.

மூக்கில் ரத்தப்போக்கு

காலையில் எழுந்தவுடன் மூக்கில் ரத்தம் கசிவது, ரத்த அழுத்தத்தின் ஆபத்தான அறிகுறி. அபாயகரமான வகையில் ரத்த அழுத்தம் அதிகரித்தால் நரம்புகள் வெடிக்கும் அபாயம் உண்டு.

பதற்றம் மற்றும் சுவாசிப்பதில் சிரமம்

காலையில் எழுந்திருக்கும் போதே பதற்றம், குமட்டல் போன்ற பிரச்சனை இருந்தாலோ, அல்லது சுவாசிப்பது சிரமம் ஏற்பட்டாலோ, மருத்துவர் கலந்தாலோசிப்பது நல்லது.

அடிக்கடி ஏற்படும் தாகம்

வாய் வறண்டு போய், அடிக்கடி தாகம் எடுப்பது உயர் ரத்த அழுத்தத்தின் அறிகுறிகளில் ஒன்றாகும். காலையில் எழுந்திருக்கும் போது வாய் உலர்ந்தால், பிபி பரிசோதிப்பது அவசியம்.

தூக்கமின்மை (Insomnia)

உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு இரவில் தூக்கம் வராது. அதனால் உடலில் சோர்வும் அதிகமாக இருக்கும்.

உயர் ரத்தம் அழுத்தம் வராமல் இருக்கவும், வந்தால் கட்டுப்படுத்தவும் (How to Control High BP) நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை

1. டெஸ்க் வேலை அதிகரித்து, உடல் உழைப்பு குறைந்து விட்ட இந்த காலகட்டத்தில், உடற்பயிற்சியை வழக்கமாக்கிக் கொள்வது அவசியம்.

2. ஆரோக்கியமான சமச்சீர் உணவு உயர் ரத்த அழுத்த பிரச்சனை மட்டுமல்ல, நோய்கள் அண்டாமல் இருக்க உதவும். உணவில் அளவான உப்பு மட்டும் சர்க்கரை இருப்பது அவசியம்.

3. மது சிகரெட் போன்ற பழக்கங்கள் ரத்த நாளங்களை சுருங்கச் செய்து உயர் ரத்த அழுத்த பிரச்சனையை ஏற்படுத்துகின்றன. எனவே அதனை கை விடுவது அவசியம்.

4. உடன் பருமனை குறைத்து கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம் ஏனெனில் உடல் எடை உயர் ரத்த அழுத்தத்திற்கான முக்கிய காரணிகளில் ஒன்று.

Exit mobile version