Site icon Tamil News

மாணவர்களால் துன்புறுத்தல் – பின்லாந்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய மாணவர் அதிர்ச்சி தகவல்

பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்க்கியில் உள்ள பாடசாலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் மாணவர், தாம் மற்ற மாணவர்களால் துன்புறுத்தப்பட்டதால் தாக்குதலை நடத்தியதாகக் கூறியுள்ளார்.

வன்டா நகரில் இருக்கும் Viertola பாடசாலையில் அந்த 12 வயது மாணவர் இவ்வாண்டின் தொடக்கத்தில்தான் புதிதாகச் சேர்ந்தவராகும்.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியபோது அவர் முகமூடியையும் வெளியிலிருந்து வரும் சத்தத்தைக் கேட்கவிடாமல் செய்யும் காதொலிக் கருவியையும் அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

பொலிஸார் சென்றபோது அந்த மாணவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டுப் பாடசாலையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார்.

போகும் வழியில் அவர் துப்பாக்கியைக் காட்டி மற்ற மாணவர்களை மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

மாணவர் வைத்திருந்த துப்பாக்கி அவரின் உறவினருக்குச் சொந்தமானது. துப்பாக்கிச் சூட்டில் ஒரு மாணவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இரண்டு மாணவிகள் காயமடைந்தனர். மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அனைவருக்கும் வயது 12ஆகும். துப்பாக்கிச் சூடு வகுப்பறையில் நடந்ததாக நம்பப்படுகிறது.

Exit mobile version