Site icon Tamil News

வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியரின் 3 மாத கிராமம் தங்கி பயிற்சி முகாம்

எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரியில் இறுதியாண்டு வேளாண்மை, தோட்டக்கலை பட்ட படிப்புகள் பயிலும் மாணவ, மாணவியர் 3 மாத காலம்  கிராமங்களில் தங்கி வேளாண் பணிகள் பற்றிய பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதன் நிறைவு நாள் நிகழ்வில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ஆர். அசோக்  மாணவ, மாணவியரை பாராட்டினார். செங்கல்பட்டு மாவட்டம் பாபுராயன்பேட்டை வேந்தர் நகரில்  இயங்கி வரும்

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின்(SRMIST) எஸ்ஆர்எம்  வேளாண்மை அறிவியல் கல்லூரியில் (SRM College of Agriculture Scinces) பி.எஸ்சி(ஹானஸ்) வேளாண்மை,

பி. எஸ்சி(ஹானஸ்)தோட்டக்கலை இறுதி ஆண்டு  பயிலும் மாணவ, மாணவியர் 268 பேர் கல்லூரி வேளாண் மற்றும் தோட்டக்கலை பாட திட்டத்தின் கீழ்  கிராமங்களில் தங்கி வேளாண் பணிகளை அறிந்துகொள்ளும் விதமாக பயிற்சி முகாம்

மதுராந்தகம், அச்சரப்பாக்கம், சித்தாமுர், ஓரத்தி உள்ளிட்ட பல்வேறு  கிராமங்களில் 26 குழுக்களாக பிரிந்து கடந்தாண்டு டிசம்பர் 14(12.3.2022) முதல் கடந்த மார்ச் 12(12.3.23) வரை 3 மாதம் காலம் அந்த கிராமங்களில்( Village Stay )தங்கி

வேளாண்மை துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் இணைந்து வேளாண் சாகுபடி பணிகள், நீர் மேலாண்மை, மன்வளம் உள்ளிட்ட வேளாண் பணிகள் பற்றி பயிற்சியுடன்  அறிந்துகொண்டனர்.

முகாம் நிறைவு மற்றும் கிராம வேளாண் பணி அனுபவங்கள்(RAWE- Rural Agricultural Work Experience)  பற்றிய கண்காட்சி எஸ்ஆர்எம் வேளாண்மை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி டீன் முனைவர் எம். ஜவஹர்லால் தலைமை வகித்தார். நிகழ்வுக்கு    வருகை தந்தவர்களை  எஸ்ஆர்எம் சமூக அறிவியல் துறை தலைமை பேராசிரியர் முனைவர் ஏ. அன்பரசன் வரவேற்றார்,

துணை பேராசிரியர் முனைவர் ஆர். ராஜசேகரன் கிராம வேளாண் பணி அனுபவங்கள் கண்காட்சி பற்றி விளக்கி கூறினார். இக் கண்காட்சியில் கிராமங்களில் வேளாண் பணிகள் பற்றி அறிந்தவைகள், தாவர வகை   மாதிரிகள், மண் மாதிரிகள் மற்றும் பாரம்பரிய வேளாண் பணிகள் பற்றிய  போஸ்டர்கள், கை பிரதிகள் ஆகியவை இடம்பெற்றன.

எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தகவல் தொடர்பு இயக்குனர் ஆர். நந்தகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கண்காட்சியை தொடங்கி வைத்து வாழ்த்துரை  வழங்கினார்.

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் ஆர்.அசோக் கவுரவு விருந்தினராக பங்கேற்று வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பட்டதாரிகளுக்கு அரசு துறைகளில் உள்ள  ஏராளமான வாய்ப்புகள்  பற்றி பேசினார்.

இதில் வேளாண் உதவி இயக்குனர் அருள் பிரகாசம், தோட்டக்கலை அலுவலர் திரிபுராசுந்தரி ஆகியோர் பங்கேற்று வாழ்த்தி பேசினார்கள்.

கண்காட்சியில் காட்சி வைக்கப்பட்ட அச்சரப்பாக்கம், சித்தாமுர் கிராமங்களில் முகாமிட்ட மாணவர் குழுக்கள் சிறந்த குலுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

கண்காட்சியை ஓரத்தி அரசு மேல்நிலை பள்ளி மாணவர்கள் கண்டு பயணடைந்தனர்.முடிவில் உதவி பேராசிரியை முனைவர் எஸ். ஆனந்தி நன்றி கூறினார்.

 

Exit mobile version