Site icon Tamil News

ஹமாஸின் ஆவணங்கள், ஆயுதங்கள் பறிமுதல்: இஸ்ரேல்

கான் யூனிஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் பத்துக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

இஸ்ரேல் கடல்வழி மற்றும் வான்வழிப் படையுடன் இணைந்து காஸாவில் உள்ள பல தீவிரவாதிகளின் பகுதிகளில் தாக்குதல் நடத்தியதாகத் தரைப்படை தெரிவித்துள்ளது.

காஸாவில் மற்ற பகுதிகளில் நடத்திய சோதனையில், ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு அவர்களை அழித்ததாகவும், ஏகே-47, வெடிகுண்டுகள் உள்பட பல பயங்கர ஆயுதங்களைப் பறிமுதல் செய்ததாக இஸ்ரேல் தெரிவிக்கிறது.

மேலும் இஸ்ரேல் ராணுவ பீரங்கிகள் மீது தாக்குதல் நடத்திய மூன்று தீவிரவாதிகளைக் கொன்றதாகவும் தெரிவித்தது. பல்வேறு இடங்களில் தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் அமைப்பு தொடர்பான பல ஆவணங்களை பறிமுதல் செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் துவங்கிய போரில் இதுவரை பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீன மக்களை இஸ்ரேல் ராணுவம் கொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version