Site icon Tamil News

மோசமாகி வரும் சீனா – அமெரிக்கா உறவு : பாதுகாப்பு மாநாட்டில் இருதரப்பு சந்திப்பு நடைபெறுமா?

சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் புதுப்பிக்கப்பட்ட உயர்மட்ட இராணுவ உரையாடலுக்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிங்கபூரில் நடைபெறும் இறுதி பாதுகாப்பு மாநாட்டில், சீனா மற்றும் அமெரிக்க பாதுகாப்புத் தலைவர்கள் இருதரப்பு சந்திப்பை நடத்தமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வாஷிங்டன் “சீனாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பு நலன்கள் மற்றும் கவலைகளை அக்கறையுடன் மதிக்க வேண்டும், உடனடியாக தவறுகளை சரிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இரு இராணுவத்தினரிடையே உரையாடல் மற்றும் தொடர்புக்கு தேவையான சூழ்நிலையையும் உருவாக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா செயற்படுதல், தென் சீனக்கடலில் உள்ள போட்டிநிலைமை, உளவு பலூன் விவகாரம் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றங்களை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version