Site icon Tamil News

கோட் சிறப்பு காட்சிக்கு அனுமதி… தமிழ்நாடு அரசுக்கு பெரிய நன்றி சொன்ன அர்ச்சனா

தளபதி விஜய் நடித்துள்ள கோட் படத்துக்கு கடைசி நேரத்தில் சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு அரசுக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கும் நன்றி என அர்ச்சனா கல்பாத்தி ட்வீட் போட்டுள்ளார்.

கோட் படத்துக்கான சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு இன்று வழங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோட் திரைப்படத்துக்காக சுமார் 400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில் வெளிப்படையாக கூறியிருந்தார். நடிகர் விஜய்க்கு 200 கோடி சம்பளம் வழங்கியது ஏன் என்பது குறித்தும் விளக்கியிருந்தார். .

தளபதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று வெளியாக உள்ள நிலையில், கோட் படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்கிற நிலை இருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கோட் படத்துக்கு சிறப்பு காட்சிக்கான அனுமதியை தற்போது வழங்கி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கோட் திரைப்படம் காலை 10 மணிக்கு மேல் தான் திரையரங்குகளில் வெளியாகும் என்று இருந்த நிலையில், பல திரையரங்குகள் 10 மணிக்கு மேல் காட்சிகளை ஒதுக்கியிருந்தன.

இந்நிலையில், தற்போது காலை 9 மணிக்கு முதல் காட்சியை திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனை தொடர்ந்து முக்கிய திரையரங்குகளில் காலை 9 மணிக்கே முதல் காட்சி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் 5ம் தேதி மட்டுமே சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

கோட் படத்துக்கான ஸ்பெஷல் ஷோ பர்மிஷன் கிடைத்த நிலையில், தமிழ்நாடு அரசுக்கும் உதயநிதி ஸ்டாலின் அண்ணாவுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள் என்றும் எப்போதுமே சினிமாவை வாழ வைக்க நினைக்கும் உங்களின் அன்புக்கு தலை வணங்குகிறேன் என கோட் படத்தின் க்ரியேட்டிவ் புரொட்யூசரான அர்ச்சனா கல்பாத்தி தற்போது ட்வீட் போட்டுள்ளார்.

Exit mobile version