Site icon Tamil News

இலங்கையில் e-visa மோசடி – விசாரணைக்கு உத்தரவிட்ட அனுர அரசாங்கம்

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கை அரசாங்கம், இந்திய நிறுவனங்கள் மற்றும் டுபாயை தளமாகக் கொண்ட நிறுவனத்துடன் தொடர்புடைய விசா வழங்கல் ஒப்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஏப்ரலில் GBS Technology, IVS Global FZCO மற்றும் VFS Global ஆகிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முறைகேடுகள் காரணமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் அறிவித்துள்ளார்.

“முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக நாங்கள் உடனடியாக தடயவியல் தணிக்கையை ஆரம்பித்துள்ளோம்” என அமைச்சர் ஹேரத் உறுதிப்படுத்தினார்.

விசா ஒப்பந்தத்திற்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

ஒப்பந்தம் வெளிப்படையாக வழங்கப்படவில்லை என்றும், கூட்டமைப்பு 16 வருட காலப்பகுதியில் 2.75 பில்லியன் டொலர் வரை வருமானம் ஈட்ட வேண்டும் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

ஏப்ரல் 17 ஆம் திகதிக்கு முன் இருந்த அளவுகோலின்படி, on-arrival விசாக்களை வழங்குவதற்கான மின்னணு பயண அங்கீகாரம் (ETA) செயல்முறையை குடிவரவு அதிகாரிகள் இப்போது மீட்டெடுத்துள்ளனர். அதைக் கையாண்ட தனியார் கூட்டமைப்பு IVS-GBS மற்றும் VFS Global ஆகியவற்றைத் தவிர்த்துவிட்டனர்.

இந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு பொறுப்பான வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தடயவியல் தணிக்கை நடத்தப்படும் என உறுதிப்படுத்தியுள்ளார்.

Exit mobile version