Site icon Tamil News

சிங்கப்பூரில் SIM அட்டைகள் தொடர்பில் அரசாங்கம் எடுக்கவுள்ள கடுமையான நடவடிக்கை

சிங்கப்பூரில் SIM அட்டைகளைக் குற்றச்செயல்களுக்குப் பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.

இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

அதற்குப் புதிய சட்டமசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகள், குறுஞ்செய்திகளை அரசாங்கம் தடுக்கிறது. அதைத் தவிர்ப்பதற்குக் குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்கள் சிங்கப்பூர் சிம் அட்டைகளைப் பயன்படுத்துகின்றன.

மூன்று பிரிவினரைப் புதிய மசோதா குறிவைக்கிறது. முதல் பிரிவினர், பொறுப்பில்லாமல் சிம் அட்டைகளுக்குப் பதிவு செய்பவர்கள். இரண்டாவது பிரிவினர், அவற்றைப் பெறுபவர்கள், வைத்திருப்பவர்கள், விநியோகிப்பவர்கள். மூன்றாவது பிரிவினர், கடைக்காரர்களாகும்.

சிம் அட்டைகளை பணம் வாங்கிக் கொண்டு அடுத்தவருக்குக் கொடுப்போர் அது குற்றச் செயலுக்குப் பயன்படுத்தப்படும் என்று தனக்குத் தெரியாது என்று சொல்லித் தப்ப இடமுண்டு. புதிய சட்டம் நடப்புக்கு வந்ததும் அப்படித் தப்ப முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் சிறை, 10,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என குறிப்பிடப்படுகின்றது.

Exit mobile version