Site icon Tamil News

கூகுள், பேஸ்புக் நிறுவனங்கள் இலங்கையை விட்டு வெளியேறும் அபாயம்!

சமூக வலைத்தள நிறுவங்களை இலங்கையை விட்டு விரட்டும் கொடூரமான சட்டம் என ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இணைய பாதுகாப்பு சட்டமூலத்தால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று நாடாளுமன்றில் உரையாற்றிய அவர், கூகுள், ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் போன்ற நிறுவனங்கள் இந்த சட்டத்தை வரவேற்காத்து என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே இந்த வர்த்தமானியின் பிரகாரம் எது உண்மை எது உண்மையல்ல என்பதை தீர்மானிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் ஹர்ஷ டி சில்வா கேட்டுக்கொண்டுள்ளார்.

இணைய பாதுகாப்பு ஆணைக்குழுவை நிறுவுவதை நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் ஜனநாயகம் மற்றும் பேச்சு சுதந்திரம் மீதான சாத்தியமான தாக்கம் குறித்தும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டால் முதலீட்டாளர்களை ஒருபோதும் ஈர்க்க முடியாது என்றும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

Exit mobile version