Site icon Tamil News

ஜெர்மனியில் கற்கின்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

ஜெர்மனியில் கற்கின்ற மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது.

ஜெர்மன் அரசாங்கமானது பல்கலைகழகத்தில் புதிதாக கல்வி கற்கின்ற மாணவர்களுக்கு சில நிதி சலுகைகளை செய்யவுள்ளதாக தெரியவந்துள்ளது.

பல்கலை கழக மாணவர்கள் தாங்கள் பல்கலைகழகங்களில் கல்வி கற்கும் பொழுது கடன் விடயத்தில் கூடுதலான பணத்தை அவர்களுக்கு வழங்குவதற்குரிய வகையில் சட்டத்தை மிக விரைவில் இயற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் ஏற்கனவே ஒரு சட்டம் இயற்றப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டத்தின் படி சமூக உதவி பணத்தில் வாழுகின்ற பல்கலைகழக மாணவர்கள் புதிதாக பல்கலைகழகங்களுக்கு செல்லும் பொழுது ஸ்டாட் கிள்ஃபெரெட் என்று சொல்லப்படுகின்ற ஆரம்ப உதவியாக அரசாங்கமானது 1000 யூரோக்களை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது இவ்வாறு பெற்றோர் சமூக உதவி பணத்தை பெற்று வாழுகின்ற பொழுது குறித்த குடும்பத்தில் வாழும் பல்கலைகழக மாணவனும் சமூக உதவி பணத்தை பெற்றால், இவர் இவ்வகையான 1000 யூரோக்களுக்கு வருகின்ற இலை உதிர் காலங்களில் பல்கலைகழக ஆரம்பத்தின் பொழுது விண்ணப்பிக்க முடியும் என்றுமு் தெரியவந்துள்ளது.

Exit mobile version