Site icon Tamil News

பொதுத் தேர்தலுக்குச் செல்வது என்பது ஜனாதிபதியின் மீறப்பட்ட வாக்குறுதியாகும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் வகையில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய குடியரசு முன்னணியின் மாத்தறை மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பாட்டலி சம்பிக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தற்போது விவாதிக்கப்பட்டு வரும் நாடாளுமன்றத்தை கலைக்கும் நடவடிக்கையில் எந்த பிரச்சனையும் இல்லையென்றாலும், ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஜனாதிபதியை நியமித்த போது வழங்கிய வாக்குறுதிகளை மீறும் செயலாகும் எனவும் பாட்டலி சம்பிக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version