Tamil News

போடுடா வெடிய… GOAT படம் ரிலீஸ் திகதி அறிவிப்பு

GOAT படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட்டிங்கில் இன்னும் கொஞ்ச வேலைகள் மட்டுமே பாக்கியிருப்பதாக கூறப்படும் சூழலில் படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் வரவேற்பையே பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க கமிட்டானார் விஜய். படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மைக் மோகன், யோகிபாபு, பிரேம்ஜி, வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி உள்ளிட்ட பலர் நடித்துவருகின்றனர்.

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதன்படி படமானது விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.

இந்த அறிவிப்போடு படக்குழு போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. அதில் விஜய் கண்ணாடி போட்டுக்கொண்டு செம க்யூட்டாக காணப்படுகிறார்.

இதற்கிடையே விஜய்யும் அவரது ரசிகர்களும் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Exit mobile version