Tamil News

சர்ப்ரைஸாக வெளியாகிறது கோட் பட டிரைலர் – எப்போ தெரியுமா?

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். விஜய் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக இளம் நடிகை மீனாட்சி செளத்ரி நடித்துள்ளார்.

மேலும் சினேகா, லைலா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, நிதின் சத்யா, அஜ்மல், பிரேம்ஜி, வைபவ், பார்வதி நாயர், யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

கோட் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். அவர் இசையில் நடிகர் விஜய் இரண்டு பாடல்களை பாடி உள்ளார்.

நடிகர் விஜய் இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். அதில் இளம் வயது கதாபாத்திரமும் ஒன்று, அதை டீ ஏஜிங் டெக்னாலஜியை பயன்படுத்தி விஜய்யை இளமையாக காட்டி இருக்கின்றனர்.

கோட் திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் கோட் படம் ரிலீசாக வாய்ப்புள்ளது.

இந்நிலையில், அப்படத்தின் டிரைலர் ரிலீஸ் பற்றிய அப்டேட் கசிந்துள்ளது. அதன்படி வருகிற ஆகஸ்ட் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று கோட் பட டிரைலர் வெளியிடப்பட உள்ளதாம். அதற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version