Tamil News

கோட் பட கிளைமேக்ஸ் தொடர்பில் வெளியான ரகசியம்… முதல் விமர்சனம்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் நாட்டை தவிர்த்து பல்வேறு மாநிலங்களில், வெளிநாடுகளில் அதிகாலை 4 மணிக்கே தளபதி தரிசனத்தை ரசிகர்கள் காண காத்திருக்கின்றனர். கோட் படத்தின் இசை வெளியீட்டு விழாவையும் வேண்டாம் என தவிர்த்து விட்ட நடிகர் விஜய் படத்திற்கு தேவையான புரமோஷன்களை நடத்த க்ரீன் சிக்னல் கொடுத்து விட்டார் எனக் கூறுகின்றனர்.

கோட் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் நீளம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், கண்டிப்பாக ஒரு சீன் கூட போர் அடிக்காத விதத்தில் படத்தின் மேக்கிங் மற்றும் எடிட்டிங் இருப்பதாக தணிக்கை குழு தரப்பில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன.

கொஞ்சம் கூட படம் போர் அடிக்கவே இல்லை என்றும் படத்தில் நடித்துள்ள நடிகர்களின் அறிமுகங்களை ஆரம்பத்திலேயே கொடுத்து விடும் இயக்குநர் 15வது நிமிடத்தில் இருந்து பரபரப்பாக இண்டர்வெல் காட்சி வரை வெறித்தனமான ஸ்க்ரீன்பிளேவை கொடுத்திருப்பதாகவும், இடைவேளைக்குப் பிறகும் படம் எங்கேயும் தேங்கி நிற்காமல் கிளைமேக்ஸ் வரை ஜெட் வேகத்தில் செல்வதாகவும் தணிக்கை குழு அதிகாரிகள் சிலர் படத்தை பாராட்டிய தகவல்கள் கசிந்துள்ளன.

நடிகர் விஜய் வயதான தோற்றம், நடுத்தரமான வயது ஏஜெண்ட் மற்றும் முரட்டுத்தனமான இளைஞர் என 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டியிருப்பதாக கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தியேட்டர்களிலும் கோட் படம் மட்டுமே அடுத்த வாரம் வெளியாகும் என்றும் இந்த வாரமும் எந்த புதிய படங்களின் இடையூறும் இருக்கக் கூடாது என்றும் கோட் வெளியான பின்னர், அடுத்த வாரமும் எந்த புதிய படங்களும் வெளியாகாது என்கின்றனர்.

முதல் நாளில் இருந்தே உலகம் முழுவதும் கோட் வசூல் வேட்டை நடத்தும் என்று கூறுகின்றனர். லியோ படம் 600 கோடி வரை வசூல் செய்த நிலையில், அந்த வசூல் சாதனையை கோட் முறியடிக்குமா? என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

Exit mobile version