Site icon Tamil News

சிங்கப்பூரில் 10,000 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள்

சிங்கப்பூரில் 10,000க்கும் அதிகமான வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு ஆரோக்கியமான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டுள்ளன.

சென்ற ஆண்டைவிட அது சுமார் 1,000 அதிகமாகும். சுகாதார மேம்பாட்டு வாரியமும் சுகாதார அமைச்சும் 60க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகளுடன் சேர்ந்து குடும்பங்களுக்கு உதவும் முயற்சியில் இறங்கின.

ஆரோக்கியமான உணவைத் தெரிவுசெய்வது உட்பட பல வழிகளில் குடும்பங்கள் அவற்றின் நலனில் அக்கறை செலுத்துவதை அமைப்புகள் ஊக்குவிக்க விரும்புகின்றன.

மளிகைப் பொருள்களை வாங்கும்போது எவற்றைத் தெரிவுசெய்யலாம் என்பதைக் காட்டுவதற்கான முன்னோடி முயற்சிதான் இது என்று சுகாதார மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ரஹாயு மஹ்ஸாம் கூறினார்.

விழாக்காலத்திற்குப் பிறகும் முயற்சிகள் தொடரும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தின் ஈடுபாட்டுடன் ஆரோக்கிய வாழ்வின் கலாசாரத்தை வளர்க்க முடியும் என்றும் ரஹாயு நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version