Site icon Tamil News

UPDATE (06) வாக்னர் கைப்பற்றிய பிராந்தியத்தில் போர் நடவடிக்கைகளை ஆரம்பித்த ரஷ்யா!

ரஷ்ய இராணுவம் வோரோனேஜ் பிராந்தியத்தில் “போர் நடவடிக்கைகளை” மேற்கொண்டு வருவதாக அதன் அந்நகரத்தின் ஆளுநர்  தெரிவித்துள்ளார்.

அந்நகரத்தின் ஆளுநரான அலெக்சாண்டர் குசேவ், “தேவையான செயல்பாட்டு மற்றும் போர் நடவடிக்கைகள்” “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக” நடந்து வருவதாகக் கூறினார்.

முன்னதாக மாஸ்கோவில் இருந்து 300 மைல் தொலைவில் உள்ள வோரோனேஜ் நகரில் உள்ள அனைத்து இராணுவ வசதிகளையும் வாக்னர் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ரஷ்யாவில் இருந்து இங்கிலாந்துக்கு செல்லவுள்ள பயணிகளுக்கு சிக்கல்!

வாக்னர் படையினர் கிரெம்ளினை முற்றுகையிட்டுள்ள நிலையில், விமான பயணிகள் பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக  இங்கிலாந்துக்கு திரும்பவுள்ள பயணிகளுக்கு பிரித்தானிய வெளியுறவுத்துறை எச்சரிக்கை செய்தியை விடுத்துள்ளது.

“ராஸ்டோவ் பிராந்தியத்தில் இராணுவ பதட்டங்கள் இருப்பதாகவும், நாடு முழுவதும் மேலும் அமைதியின்மை ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் தகவல்கள் உள்ளன என பிரித்தானிய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. கூடுதலாக பிரித்தானியாவிற்கு திரும்புவதற்கான விமானங்களுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொஸ்கோ நோக்கி முன்னேறும் வாக்னர் படையினர்!

வாக்னர் குழுவினர் ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டானில் உள்ள “முக்கிய பாதுகாப்பு தளங்களை ஆக்கிரமித்துள்ளதாக பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வாக்னருக்கும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கும் இடையே நேரடி இராணுவ மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், பிரித்தானியா குறிப்பிட்டுள்ளது.

துணை ராணுவப் பிரிவுகள் வோரெனேஜ் பகுதி வழியாக “வடக்கே நகர்ந்து நிச்சயமாக மொஸ்கோவிற்கு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளனர் எனவும் பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

“இது சமீபத்திய காலங்களில் ரஷ்ய அரசுக்கு மிக முக்கியமான சவாலை பிரதிபலிக்கிறது,” என்று பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

கலகம் செய்தவர்கள் ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்துள்ளார்கள் – புட்டின்!

நாங்கள் அராஜகத்தை எதிர்த்துப் போராடுகிறோம்  என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

வக்னர் படையினரின் உள் கலகம் எங்களுக்கு ஏற்பட்ட மரண அடி என விவரித்துள்ள அவர், எதிர் நடவடிக்கைகளை சேர்ப்பது மிகவும் கடினமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவெளை ரஷ்யாவின் ரோஸ்டோவை சுற்றியுள்ள பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர்,  மாஸ்கோ மற்றும் பிற பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“இந்த தாக்குதலை முறியடிக்க நான் எல்லாவற்றையும் செய்கிறேன் என்றும் அவர்கள் முதுகில் குத்துகிறார்கள் எனவும் புட்டின் தெரிவித்துள்ளார்.

“கலகம் செய்தவர்கள் ரஷ்யாவைக் காட்டிக் கொடுத்துள்ளனர். மற்றும் அதில் ஈடுபட்டுள்ள எவரும் ஆயுத மோதலில் எந்த வகையான பங்கேற்பையும் நிறுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.” எனவும் புட்டின் மேலும் தெரிவித்துள்ளார்.

வாக்னர் குழுவின் மிரட்டல் : நாட்டு மக்களுக்கு உரையாற்றும் புட்டின்!

ரஷ்யாவின் தெற்கு இராணுவ மாவட்டத்தை வாக்னர் குழு ஆக்கிரமித்துள்ள நிலையில், ஜனாதிபதி விளாடிமிர் புடின் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவில் எல்லாம் இப்போதுதான் ஆரம்பமாகுகிறது – உக்ரைன்!

ரஷ்யாவில் இனிதான்  எல்லாம் ஆரம்பமாகுகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மூத்த உதவியாளர் டுவிட் செய்துள்ளார்.

குறித்த டுவிட்டில்,  ரஷ்ய கூலிப்படைத் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜினின் நடவடிக்கைகளை “பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை” என்றும் அவர் விவரித்துள்ளார்.

ரஷ்ய அமைச்சரை அகற்றுவோம் – வாக்னர் படையினரின் பகிரங்க எச்சரிக்கை!

ரஷ்ய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வந்த கூலிப்படையினர் ரஸ்ய அரசாங்கத்திற்கு எதிராக கலகத்தில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து ரஸ்யாவில் திடீர் குழப்ப நிலையேற்பட்டுள்ளது.

மொஸ்கோ உட்பட ரஸ்ய நகரங்களில் இராணுவ வாகனங்களை அவதானிக்க முடிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில்,  ரஸ்யாவில் உருவாகிவரும் நிலைமையை உன்னிப்பாக அவதானித்துவருவதாக அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ரஸ்யாவுடன் இணைந்து உக்ரைன் படையினருக்கு எதிராக செயற்பட்டுவந்த வோக்னர் ஆயுதகுழுவினர் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் தங்கள்,  முகாம்கள் மீது எறிகணை தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்ததை தொடர்ந்தே இந்த குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.

எங்கள் படைமுகாம் மீது ரஸ்ய படையினர் ரொக்கட் தாக்குதல்களை மேற்கொண்டனர் எங்கள் தோழர்கள் பலர் கொல்லப்பட்டனர் அவர்கள் எங்களை ஏமாற்ற முயல்கின்றனர் என வாக்னர் கூலிப்படையின் தலைவர்  பிரிகோஜின் தெரிவித்திருந்தார்.

எனினும் ரஸ்ய பாதுகாப்பு அமைச்சர் சேர்ஹே சைய் இதனை மறுத்திருந்தார். இதனை தொடர்ந்து ரஸ்ய பாதுகாப்பு அமைச்சரை தனது படையினர் அகற்றுவார்கள் என எச்சரித்த வாக்னர் குழுவின் தலைவர் ரஸ்ய படையினரை தலையிடவேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.

Exit mobile version