Tamil News

எரிவாயு தேவையை நிவர்த்தி செய்ய கனடாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ள ஜேர்மனி

தனது எரிவாயுத் தேவைகளுக்காக பெரிதும் ரஷ்யாவை நம்பியிருந்தது ஜேர்மனி. ஆனால், உக்ரைன் போரைத் தொடர்ந்து, ஜேர்மனியைக் கைவிட்டது ரஷ்யா. எரிவாயுத் தேவைகளுக்காக வேறு சில நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துவருகிறது ஜேர்மனி. அவ்வகையில், தற்போது கனடாவும் ஜேர்மனியும் எரிவாயு தொடர்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தின்படி, கனடாவின் Newfoundland and Labrador மற்றும் Nova Scotia முதலான இடங்களில் தயாரிக்கப்படும் ஹைட்ரஜன் எரிவாயு, ஜேர்மனிக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பான பணிகள், 2022ஆம் ஆண்டு ஜேர்மன் சேன்ஸலரான ஓலாஃப் ஷோல்ஸ் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை சந்தித்தபோதே துவங்கியதாக தெரிவிக்கிறார் கனேடிய பெடரல் ஆற்றல் மற்றும் இயற்கை வளங்கள் துறை அமைச்சரான Jonathan Wilkinson.

Hydrogen a 'multibillion dollar opportunity' for Canada, says Wilkinson

கடந்த ஒன்றரையாண்டுகளாக இந்த விடயம் தொடர்பான பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கும் Jonathan, இப்போது, கனேடிய பசுமை ஹைட்ரஜன் எரிவாயுவை வாங்க விரும்பும் ஜேர்மன் நிறுவனங்களையும், கனடாவின் Newfoundland and Labrador மற்றும் Nova Scotia முதலான இடங்களில் ஹைட்ரஜன் எரிவாயு தயாரிக்கப்படுவதையும் எப்படி ஒருங்கிணைப்பது என்பது குறித்த புரிதலை அடைந்துள்ளோம் என்கிறார்.

Exit mobile version