Site icon Tamil News

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனை – பாரிய சர்ச்சையில் சிக்கியுள்ள ஜெர்மனி

இஸ்ரேலுக்கு ஜெர்மனி ஆயுத விற்பனையை நிறுத்துமாறு நிகரகுவா ஐ.நா.வின் உச்ச நீதிமன்றத்தை கேட்டுள்ளது.

ஐ.நா. இனப்படுகொலை உத்தரவை மீறி இஸ்ரேலுக்கான ஆயுத ஏற்றுமதியை ஜெர்மனி நிறுத்திக்கொள்ள உத்தரவிடும்படி அனைத்துலக நீதிமன்றத்தில் நிக்கராகுவா வழக்குத் தொடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கும் ஜெர்மனி, காஸாவுக்கு நிவாரணப் பொருள்களையும் அனுப்புவது வருத்தத்துக்குரியது என்று நிக்கராகுவா குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் நெருக்கமான நட்பு நாடுகளுள் ஜெர்மனியும் ஒன்றாகும். காஸா போர் தொடங்கியதிலிருந்து 350 மில்லியன் டொலருக்கு மேல் ராணுவச் சாதனங்களையும் ஆயுதங்களையும் இஸ்ரேலுக்கு ஜெர்மனி வழங்கியிருக்கிறது

அனைத்துலக நீதிமன்றத்தில் ஜெர்மனிக்கு எதிராக 43 பக்க அறிக்கையைச் சமர்ப்பிக்கப்பட்டது.

1948ஆம் ஆண்டின் இனப்படுகொலைக்கு எதிரான உடன்பாட்டை ஜெர்மனி மீறியிருப்பதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் பாலஸ்தீன அகதிகள் அமைப்புக்கு நிதி வழங்குவதை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.

காஸாவில் இனப்படுகொலை அபாயம் நீடிப்பதால் ஜெர்மனி அதன் முடிவை மாற்றிக்கொள்ள அனைத்துலக நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று நிக்கராகுவா வலியுறுத்தியது.

ஜெர்மனி இன்று அதன் வாதத்தை நீதிமன்றத்தில் முன்வைக்கவுள்ளமை குறிப்பிதடதக்கது.

Exit mobile version