Site icon Tamil News

காசா : வான்வழி தாக்குதலில் UN ஊழியர்கள் அறுவர் உட்பட 34 பேர் உயிரிழப்பு !

காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர்.

இந்நிலையில், காசாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள நுசிராட்டில் உள்ள பள்ளிக்கூடமாக மாறிய தங்குமிடத்தின் மீது நேற்று இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 6 ஐ.நா. ஊழியர்கள், 19 பெண்கள் உள்பட 34 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்திற்கு ஐ.நா. தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காசாவில் நடப்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. சுமார் 12,000 பேர் தங்குமிடமாக மாற்றப்பட்ட பள்ளி இன்று மீண்டும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களால் தாக்கப்பட்டது. கொல்லப்பட்டவர்களில் நமது ஊழியர்கள் 6 பேர் அடங்குவர். சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் இந்த வியத்தகு மீறல்கள் இப்போது நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version