Site icon Tamil News

இலங்கையில் எரிவாயு விலை குறைப்பு

இலங்கையில் எரிவாயு விலை இன்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட உள்ளது.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 3790 ரூபாவாகும்  என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

விலை சூத்திரத்தின்படி மாதாந்த விலை திருத்தத்தின் பிரகாரம், லிட்ரோ எரிவாயுவின் விலை குறைக்கப்படவுள்ளது.

இதேவேளை, 5 கிலோ கிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அதன் புதிய விலை 1,522 ரூபாவாக பெயரிடப்பட்டுள்ளது.

மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 712 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், அது 28 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும் லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

Exit mobile version