Site icon Tamil News

ஹங்கேரி பிரதமருக்கு எதிராக கண்டனம் வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி

ஹங்கேரி நாட்டின் பிரதமர், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை சந்தித்ததற்கு, பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்

ஹங்கேரி நாட்டின் பிரதமரான Viktor Orbán, சமீபத்தில் ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை சந்தித்துள்ளார். இந்த சந்திப்புக்கு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களிடையே பெரும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, பல நாடுகள் ரஷ்யாவுக்கெதிராக தடைகள் விதித்தன. அந்த நிலையிலும், போரை நிறுத்துவதற்காக பலமுறை புடினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.ஆனால், அவரது எந்த முயற்சிக்கும் புடின் செவிசாய்க்கவேயில்லை. இது மேக்ரானுக்கு மட்டுமல்ல, பல நாடுகளுக்கு கோபத்தை உருவாக்கியது.

புடினுடன் நட்பு பாராட்டிவந்த மேக்ரான், அதற்குப் பின் ரஷ்யாவுக்கெதிராக பேசத்துவங்கினார். இப்போது ரஷ்யாவுடன் நமக்கு இருக்கும் சூழலில், ரஷ்யாவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நிகழ்த்துவது, நமது ஒற்றுமையை பலவீனப்படுத்தும் என்று, பிரஸ்ஸல்ஸில் நடந்த ஐரோப்பிய ஒன்றிய தலைவர்களின் கூட்டத்திற்குப் பிறகு மக்ரோன் கூறினார்.

ஒரு நாட்டின் தலைவர் அல்லது அரசாங்கம் இன்னொரு திசையில் செல்வதை யாராலும் தடை செய்யமுடியாது. ஆகவே, அதனால் நாம் அதிர்ச்சியடையவும் இல்லை.என்றாலும்,மரியாதை மற்றும் விசுவாசத்தின் நிமித்தமாக, ரஷ்ய தலைவரை சந்திக்க இருப்பது குறித்து முன்கூட்டியே ஒன்றுகூடி பேசியிருக்கவேண்டும்.ஆக, ஐரோப்பிய நாடுகளாக நாம் அனைவரும் ரஷ்யாவுக்கு எதிராக ஒன்றிணைந்து நிற்க முடிவு செய்துள்ள நிலையில், ஹங்கேரி நாட்டின் பிரதமரான Viktor Orbán, ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடினை சந்தித்தது தவறு என்று கூறியுள்ளார் மேக்ரான்.

பிரஸ்ஸல்ஸில் நடந்த உச்சிமாநாட்டில் மேக்ரான் மட்டுமின்றி பல தலைவர்கள் Viktor Orbánஐ விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version