Site icon Tamil News

ஹமாஸ் தலைவரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் நடவடிக்கை!

பிரான்ஸ் இன்று (05.12) ஹமாஸ் காசா தலைவர் யாஹ்யா சின்வார் மீது சொத்து முடக்கம் விதித்துள்ளது.

இஸ்லாமிய குழுவின் சமீபத்திய தலைவர், அதன் தேசிய தடைகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக  நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஒரு ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நவம்பர் 13 அன்று பிரான்ஸ் ஹமாஸ் இராணுவத் தளபதி முகமது டெய்ஃப் மற்றும் அவரது துணைத்தலைவர் மர்வான் இசா மீது தேசிய அளவில் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

ஐரோப்பிய யூனியன் மட்டத்தில் ஹமாஸ் தனிநபர்கள் மற்றும் அதன் நிதி வலையமைப்பு மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version