Site icon Tamil News

பொதுமக்களைப் பாதுகாக்குமாறு ரஷ்யக் கட்சிகளிடம் ரிஷி சுனக் கோரிக்கை

ரஷ்யாவில் உள்ள அனைத்து தரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

இது வரை காலமும் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்து வந்த வாக்னர் குழுவினர் திடீரென் அந்நாட்டுக்கு எதிராக திரும்பி விமான நிலையம் மற்றும் இராணுவ தளங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக அறிவித்தனர்.

இதனால் ரஷ்யாவில் பதற்ற நிலை உருவானதுடன், முக்கிய பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே னைத்து தரப்பினரும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

“அனைத்து தரப்பினரும் பொறுப்புடன் இருக்க வேண்டும் மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே நான் சொல்லும் மிக முக்கியமான விஷயம்.

“நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம், நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், உண்மையில் நான் அவர்களில் சிலருடன் இன்று பின்னர் பேசுவேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

Exit mobile version