Site icon Tamil News

தென்சீனக் கடலில் முதல் முறையாக கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கிய நான்கு நாடுகள்

பிலிப்பீன்ஸ், கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவை புதன்கிழமை (ஆகஸ்ட் 7), தென்சீனக் கடலில் முதல்முறையாகக் கூட்டு ராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன.

படையினருக்கு இடையிலான கூட்டுச் செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவது இதன் நோக்கம் என்று அந்த நான்கு நாடுகளின் ராணுவங்கள் தெரிவித்தன.

இரண்டு நாள் கூட்டுப் பயிற்சியில் கடற்படைகளும் விமானப் படைகளும் பங்கேற்கும்.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் சென்ற வாரம் பிலிப்பீன்சும் ஜப்பானும் கூட்டுப் பயிற்சி மேற்கொண்டன.முன்னதாக, பிலிப்பீன்சின் நட்பு நாடான அமெரிக்கா, ஜூன் மாதத்தில் இத்தகைய கூட்டு ராணுவப் பயிற்சிகளை மணிலா, தோக்கியோ போன்றவற்றுடன் இணைந்து மேற்கொண்டது.

சர்ச்சைக்குரிய தென்சீனக் கடற்பகுதியில் கப்பல் போக்குவரத்துச் சுதந்திரம் அதன் வான்வெளியில் விமானப் போக்குவரத்துச் சுதந்திரம் ஆகிய உரிமைகளை நிலைநிறுத்த கூட்டுப் பயிற்சி இடம்பெறுவதாக நான்கு நாட்டு ராணுவங்கள் விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மணிலாவிலிருந்து 200 கடல்மைல் சுற்றுவட்டாரமான அதன் தனிப்பட்ட பொருளியல் பகுதிக்குள் கடற்படைகளும் விமானப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபடும் என்று அந்த அறிக்கை கூறுகிறது. ஒத்துழைப்பையும் இணைந்து செயல்படும் திறனையும் மேம்படுத்த இது உதவும் என்று அது குறிப்பிட்டது.

Exit mobile version