Site icon Tamil News

சிங்கப்பூரில் வழக்கில் வெற்றிபெற்ற வெளிநாட்டு ஊழியர் – தமிழருக்கு கிடைக்கும் நஷ்டஈடு

சிங்கப்பூரில் லொரியின் பின்புறத்தில் இருந்து தவறி விழுந்ததில் வெளிநாட்டு ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.

அதற்காக 100,000 சிங்கப்பூர் டொலர் நஷ்டஈடு கோரி நிறுவனத்தின் மீது அவர் வழக்கு தொடுத்துள்ளார்.

லொரியின் பின்புறத்தில் 24 பேருடன் வேலையிடத்துக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கீழே இறங்கும் போது அவர் விழுந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ரிகல் மரைன் சர்வீசஸ் நிறுவனத்தின் அலட்சியம் அல்லது அது கடமையை மீறியதால் தான் விபத்து ஏற்பட்டதாக ஊழியர் ராமலிங்கம் முருகன் வாதிட்டார்.

இந்நிலையில், முருகன் மீது குற்றம் இல்லை என்றும் அவர் கவனக்குறைவாக செயல்படவில்லை என்றும் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இழப்பீடு தொகை எவ்வளவு என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முருகன், கப்பல் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் எஃகு கட்டுமானம் மற்றும் பெயின்டராக பணிபுரிந்தார்.

2021ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி அன்று, அவர் தனது தங்கும் விடுதியிலிருந்து பூன் லேயில் உள்ள நிறுவனத்துக்கு 24 ஊழியர்களுடன் லாரியில் சென்றார். அங்கிருந்து, அவர் நியமிக்கப்பட்ட பணியிடத்திற்கு செல்ல மற்றொரு லாரியில் சென்றுள்ளார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், லாரியில் ஊழியர்களை மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்தது.

முருகன், லாரியில் இருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது, ​​மற்ற ஊழியர்களால் தள்ளப்பட்டதால், அவர் சமநிலை இழந்து கீழே விழுந்தார்.

அதன் பின்னர், அவர் Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு முழங்கால் மூட்டு மற்றும் குருத்தெலும்பு உடைந்ததாக கண்டறியப்பட்டது.

பின்னர் அவருக்கு அவர் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 2021 ஜனவரி 3 முதல் ஜூன் 2 வரை அவர் மருத்துவ விடுப்பில் இருந்தார்.

 

Exit mobile version