Site icon Tamil News

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலையில் உச்சக்கட்ட அதிகரிப்பு

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இன்றைய தினத்தின் நிலவரப்படி கரட் ஒரு கிலோவின் மொத்த விலை 750 ரூபாவாகவும், பீட்ரூட் ஒரு கிலோ 380 ரூபாவாகவும், கோவா கிலோ 500 ரூபாவாகவும், பீன்ஸ் கிலோ ஒன்றின் மொத்த விலை 600 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

அத்துடன், வெண்டைக்காய், தக்காளி மற்றும் ஏனைய மரக்கறிகளின் விலைகள் தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக, நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்தார்.

விலையேற்றம் காரணமாக நுகர்வோர் காய்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version