Site icon Tamil News

வரலாற்றில் முதன்முறையாக இலங்கையர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்கும் நாடு

இலங்கையில் உள்ள திறன்மிக்க புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்புகளை ஆரம்பித்துள்ளதாக மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.

வரலாற்றில் முதன்முறையாக ரஷ்ய கூட்டமைப்பில் உள்ள இலங்கைக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

இலங்கையின் முழு அரச நிறுவனமான இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் இணைந்து வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் கீழ், 58 தையல்காரர்களைக் கொண்ட முதல் குழுவினர் ஆகஸ்ட் 02, 2023 அன்று ரஷ்ய கூட்டமைப்பிற்கு சென்றது. அத்துடன், நிஸ்னி நோவ்கோரோட் பிராந்தியத்தில் அமைந்துள்ள இரண்டு புகழ்பெற்ற ஆடை உற்பத்தி தொழிற்சாலைகளில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இந்த 58 தையல்காரர்களை இடைநிலை நிறுவனங்களின் ஈடுபாடு இன்றி ஆட்சேர்ப்பு செய்வதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரகத்துடன் ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்கு தூதரகம் மேற்படி முதலாளிகளுக்கு வசதி செய்துள்ளது.

இலங்கையின் திறமையான தையல்காரர்களுக்கு மேலும் 700 வேலை வாய்ப்புகளை வழங்குவதற்காக நிஸ்னி நோவ்கோரோடில் உள்ள பிராந்திய அரசாங்க அதிகாரிகளுடன் முற்போக்கான முறையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தூதரகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version