Site icon Tamil News

மலேசியாவில் தொடக்கப்பள்ளி ஒன்றின் உணவில் நச்சுதன்மை ; 100க்கு மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில்..

மலேசியாவின் சாபா மாநிலத்துக்குச் சொந்தமான புலாவ் கயா தீவில் நச்சுணவு காரணமாக 100க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர்.

ஜூலை 22ஆம் திகதி காலை 9.50 மணி அளவில் அவர்கள் சாப்பிட்ட நாசி லெமாக் இதற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.அதே நாளன்று பிற்பகல் 2.09 மணி அளவில் 103 மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி ஆகியவற்றால் அவர்கள் அவதியுற்றனர்.

இதுகுறித்து மருந்தகங்களும் அரசாங்க மருத்துவமனைகளும் கோத்தா கினபாலு சுகாதார அலுவலகத்திடம் தகவல் தெரிவித்தன.

எட்டு மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.95 மாணவர்கள் வெளிநோயாளி சிகிச்சை பெற்றுக்கொண்டனர்.பாதிக்கப்பட்ட மாணவர்கள் 6 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்டவர்கள்.யாரும் மரணமடையவில்லை என்று சாபா சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் அசிட்ஸ் சன்னா தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட பள்ளியின் உணவகம் மூடப்பட்டுள்ளதாகவும் வசதி குறைந்த மாணவர்களுக்கான கூடுதல் உணவுத் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த விவகாரம் குறித்து விசாரணை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டது.

Exit mobile version