Site icon Tamil News

வங்காளதேசத்தில் சிறைச்சாலைக்கு தீவைத்த போராட்டக்காரர்கள் – கைதிகள் தப்பி ஓட்டம்

பாகிஸ்தானிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ல் நடந்த போரில் பங்கேற்ற வங்காளதேசத்தின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு அரசு வேலைவாய்ப்புகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த படைவீரர் இடஒதுக்கீடு முறை பாரபட்சமாக இருக்கிறது என மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

தலைநகர் டாக்காவில் உள்ள ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் பிரிவைச் சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசி மாணவர்களை கலைத்தனர்.

இந்த வன்முறையில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. போலீசார் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வங்காளதேசத்தின் மத்திய பகுதியில் உள்ள நர்சிங்டி மாவட்டத்தில் உள்ள ஜெயிலுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதனை பயன்படுத்தி ஜெயலில் இருந்து 100க்கும் மேற்பட்ட கைதிக்ள தப்பி ஓடிவிட்டனர்.

Exit mobile version