Tamil News

உலகை புரட்டிப் போடும் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பு! ஆச்சரியத்தில் வல்லுநர்கள்

உலக அளவில் பிரபலம் வாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஆப்பிள். Mac என்ற கம்ப்யூட்டர், ஐ போன் என்ற தொடுதிரை அம்சம் கொண்ட செல்போன், ஐ பாட் என்று பல்வேறு தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்கி, டிஜிட்டல் யுகத்தில், பெரிய புரட்சியே, அந்த நிறுவனம் செய்திருந்தது.

இவ்வாறு ஒவ்வொரு முறையும், புதிய நவீன படைப்புகளை உருவாக்கி, வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் ஆப்பிள் நிறுவனம், தற்போது இன்னொரு வித்தியாசமான கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதாவது, Virtual Reality அம்சம் கொண்ட ஹெட்செட் ஒன்றை ஆப்பிள் நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இந்த ஹெட்செட்டை, கண்களில் மாட்டிக் கொண்டு, நாம் கம்ப்யூட்டர்களை பயன்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது.

ஆப்பிளின் இந்த நவீன ஹெட்செட்டில், பல்வேறு புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

அதாவது, முன்பு வெளியான விர்ச்சுவல் -ரியாலிட்டி ஹெட்செட்களை பயன்படுத்தும்போது, நிஜ உலக சூழலில் என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. ஆனால், தற்போது உருவாகியுள்ள ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட் மூலம், அந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.

இந்த ஹெட்செட்டை பயன்படுத்தும்போது, நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதையும் அறிய முடியும், கனிணியில் நாம் காண விரும்பும் காட்சியை 3D-யிலும் பார்க்க முடியும் என்று கூறப்படுகிறது.

Exit mobile version